பாடசாலை மாணவர்கள் மற்றும் இளைஞர் யுவதிகளை இலக்கு வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் பொரளை பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 6 கோடி ரூபா பெறுமதியான 599,000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here