Monday, July 27, 2026
No menu items!

திலித் ஜயவீர

சர்வஜன சபைகள் மூலம் மக்களிடம் தொழில்முனைவோர் உணர்வு வளர்க்கப்படும் – திலித் ஜயவீர!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்குப் பிறகு நிறுவப்படும் சர்வஜன சபைகள் மூலம் ஹொரணை மக்களின் மனதில் தொழில்முனைவோர் உணர்வு வளர்க்கப்படும் என்று சர்வஜன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். ஹொரணை, பொகுனுவிட்ட பகுதியில் நேற்று (30/04/2025) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்த நிகழ்வில் மேலும்...

சர்வகட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்குமாறு திலித் எம்.பி கோரிக்கை..!

அமெரிக்காவின் புதிய தீர்வை வரி உள்ளிட்ட நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் தொடர்பில் கலந்துரையாடி தீர்வைக் கண்டறிவதற்காக சர்வகட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்குமாறு சர்வசன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர கோரிக்கை விடுத்துள்ளார். அம்பாறையில் நேற்று (07/04/2025) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்ட அவர், தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில், ‘‘இந்தியப் பிரதமரின்...

ஜனாதிபதி மிதிப் பலகையிலா வெளிநாடுகளுக்கு பயணம் செய்தார்? – திலித் ஜயவீர..!

‘‘மக்களின் எதிர்பார்ப்புகளை அதிகரித்த தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அந்த எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பில் இருந்து விலகிப் போக முடியாது என்றும் அவற்றை நிறைவேற்றியே ஆக வேண்டும்’’ என்றும் சர்வசன அதிகாரம் கூட்டணியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று (27/02/2025) நடைபெற்ற வரவு செலவுத் திட்டத்தின் ஜனாதிபதி செலவினத் தலைப்பு மீதான...

அரசாங்கம் என்ன சூழ்ச்சி செய்கின்றது? – திலித் கேள்வி..!

‘‘சேவை ஏற்றுமதியின் அடிப்படையில் 15 சதவீத வரி விதித்து தேசிய இறைவரிச் சட்டத்துக்கு அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனைகளினூடாக ஆக்கபூர்வமான இளைஞர்கள் மற்றும் தொழில் முயற்சியாண்மை ஊக்கமிழந்துள்ளது. இது எமது நாட்டின் தொழில்முனைவை முழுமையாக அழிக்கும் செயற்பாடாகும். அரசாங்கத்துக்கு டொலர் அவசியமாக இருக்கும்போது இவர்கள் என்ன சூழ்ச்சி செய்கிறார்கள்’’ என சர்வசன அதிகாரம் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற...

மக்களை தவறாக வழிநடத்த முயற்சிக்கும் அரசாங்கம்; குற்றம் சாடிய திலித் ஜயவீர!

தேர்தல் காலத்தில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்பது தொடர்பில் அரசாங்கம் உண்மையாக இருக்க வேண்டும் என சர்வஜன பலய (SB) தலைவரும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர வலியுறுத்தியுள்ளார். நேற்றைய தினம் (9) பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜயவீர, அரசாங்கம் தனது விஞ்ஞாபனம் மற்றும் தெளிவான வேலைத்திட்டம் இன்றி வழங்கிய...

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது – உண்மையை உடைத்த திலித்..!

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது என்று மக்களுக்கு உண்மையை கூறுவோம் என நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் இன்று வியாழக்கிழமை (1/9/2025)கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருந்தனர்.  அவர்கள் பாவம் என்றே நான் நினைக்கிறேன். மக்களும் தற்போதும் பெரிய எதிர்பார்ப்புகளைக் கொண்டுள்ளனர். க்ளீன் ஸ்ரீலங்கா...

சர்வஜன அதிகாரத்தின் பக்கம் சாய்ந்த எஸ்.எம். சந்திரசேன..!

முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன இன்று (23.12.2024) சர்வஜன அதிகாரத்தின் உறுப்பினராக இணைந்து கொண்டார். கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீரவிடம் இருந்து அவர் கட்சி உறுப்புரிமையை பெற்றுக்கொண்டார். சர்வஜன அதிகாரத்தின் தலைமைக் குழுவிற்கும் முன்னாள் அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளார். 2001 முதல் 2024 வரை அனுராதபுரம் மாவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். எஸ்.எம். சந்திரசேன ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன...

திலித் ஜயவீரவை தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க தீர்மானம்…!

'சர்வஜன பலய' கூட்டணியின் தலைவரும் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளருமான திலித் ஜயவீரவை கட்சியின் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்க தீர்மானித்துள்ளதாக 'சர்வஜன பலய' கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சன் செனவிரத்ன தெரிவித்துள்ளார். இந்த தீர்மானத்தை கூட்டணியின் செயற்குழு ஏகமனதாக எட்டியதாக 'சர்வஜன பலய' அறிக்கை வெளியிட்டுள்ளது. அதற்கமைய, சர்வஜன பலய கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற...

திலித் ஜயவீரவுக்கு சவால் விடுத்த திலகரட்ன டில்ஷான்!

ஐக்கிய ஜனநாயக குரல் (UDV) வேட்பாளர் திலகரட்ன டில்ஷான், முன்னாள் கிரிக்கெட் வீரர் இரட்டைக் குடியுரிமை பெற்றவர் என்ற தனது கூற்றை நிரூபிக்குமாறு ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவுக்கு சவால் விடுத்துள்ளார்.  தனது குடியுரிமையை கேள்விக்குள்ளாக்கியதற்காக திலித் ஜயவீரவை கடுமையாக சாடிய திலகரத்ன டில்ஷான், ஜயவீர தனது கூற்றுக்களை நிரூபிக்க முடிந்தால், தனது தேர்தல் முயற்சியில்...

‘பதக்கம்’ சின்னத்தில் போட்டியிடும் சர்வஜன அதிகாரம் கட்சி..!

எதிர்வரும் நாடாளுமன்றத்தில் பலம்வாய்ந்த எதிர்க்கட்சியொன்றாக செயற்படுவதே தங்கள் இலக்காகும் என சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர் திலித் ஜயவீர தெரிவி்த்துள்ளார். திலித் ஜயவீர தலைமையில்,  'பதக்கம்' சின்னத்தின் கீழ் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் விசேட கூட்டம் ஒன்று நேற்றைய தினம்(12) மாலை வஸ்கடுவ ஹோட்டலில் இடம்பெற்றது. அங்கு உரையாற்றும் போதே திலித் ஜயவீர மேற்கண்டவாறு...
- Advertisement -spot_img

Latest News

கடல் பகுதிகளில் பலத்த காற்று; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வளிமண்டலவியல் திணைக்களம் கடல் பகுதிகளுக்கான பலத்த காற்று தொடர்பான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. பொத்துவில் முதல் ஹம்பாந்தோட்டை வரையிலும் கல்பிட்டியில் இருந்து மன்னார் ஊடாக காங்கேசன்துறை வரையிலும் கடல்...
- Advertisement -spot_img