விஜயகுமார் புதிய வாழ்வு இல்லத்தின் இணைப்பாளர் விஜயகுமார் விஜயலாதன், யாழ் ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இலங்கை அபிவிருத்தி அடைந்து வரும் நாடாக இருந்தாலும் மாற்றுத்திறனாளிகள் இப்போதும் தமது தேவைகள் நிறைவேற்றுவதில் அச்சத்துடனேயே வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
எங்களை பொறுத்த வரையில் சமூகத்தின் மத்தியில் ஒரு மாற்றுத்திறனாளி தன்னுடைய அன்றாட தேவைகளை பொதுச் சேவையில், அதாவது குடும்பத்திலிருந்து பொது இடங்களிலும் மருத்துவம் மற்றும் கல்வி வேலை வாய்ப்புகள் போன்ற எல்லா விடயங்களிலுமே பல்வேறுபட்ட அணுகும் வசதிகள் இல்லாமல் அவர்கள் சிரமத்திலே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
மாற்றுத்திறனாளிகள் பலர் அச்சத்தோடும் அனைத்து துறைகளிலும் பூர்த்தி செய்ய முடியாத வசதி வாய்ப்புகள் இல்லாத சூழ்நிலையில் தான் எங்களை பொறுத்தவரையில் இருந்து வருகின்றார்கள் என குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு மாற்றுத்திறனாளிகளை மகிழ்வானர்களாக வைத்திருக்கும் களமாக புதிய வாழ்வு நிறுவனமும் சாவிகா சங்கீத அறிவாலயம் அமைப்பும் இணைந்து வடக்கின் மாற்று திறனாளிகளுக்கான இசைப்போட்டியை எதிர்வரும் 27ம் திகதி யாழ்ப்பாணம் மங்கயற்கரசி வித்தியாலயத்தில் முற்பகல் 09.00 மணியில் இருந்து நடாத்த உள்ளது. இதற்கு மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு திறமைகளை வெளிப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.








