தம்புள்ளை தேசிய பாடசாலையில் கல்வி பயின்று வந்த மாணவி ஒருவர் நேற்றைய தினம் (10)உயிரிழந்தார்.
இது குறித்து காவல்துறை தெரிவித்ததாவது, மாணவி உயிர்மாய்ப்பு செய்து கொண்டதால் மரணம் ஏற்பட்டது.
மேலும் மாணவி விஷம் அருந்தி உயிர்மாய்ப்பு செய்ததாக பிரேத பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போது, இரவு உறங்கிய பிறகு காலை கண்விழிக்காத நிலையில் பெற்றோர் பரிசோதித்த போது உயிரிழந்துள்ளார்.
பின்னர், அவர் தம்புள்ளை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதும், மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்துள்ளனர்.
காவல்துறை இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







