ஆசிரியர் பற்றாக்குறையை தீர்ப்பது தொடர்பில் அரசாங்கம் முறையான தீர்மானம் எதனையும் முன்வைக்கவில்லை என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

யாழ்ப்பாணம் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்று (04) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியில் 30 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுகின்ற நிலையில் அரச துறையில் 30 ஆயிரம் பேரை மாத்திரம் ஆட்சேர்ப்பு செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேநேரம், வட மாகாணத்திலுள்ள கஷ்ட பிரதேச பாடசாலைகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள் இடமாற்ற விடயத்தில் சிக்கல்களை எதிர்கொண்டுள்ளதாகவும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here