மின்சார தொழிற்சங்கங்கள், தமது பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் தற்போது முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துவோம் என்று தெரிவித்து வருகின்றன.

மின்சார சபையின் தன்னிச்சையான மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த செப்டம்பர் 4 ஆம் திகதி முதல் தொழிற்சங்கங்கள் சட்டப்படி வேலை செய்யும் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக, சுகயீன விடுமுறை தொழிற்சங்க நடவடிக்கை நேற்று (17) ஆரம்பமாகியதையும், இன்று இரண்டாவது நாளாகவும் அதே நடவடிக்கை தொடரும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க, அதிகாரிகள் கோரிக்கைகளை தொடர்ந்தும் புறக்கணித்தால், தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துவோம் என்று அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here