தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் துசித ஹல்லொலுவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்டுள்ளது.

சந்தேக நபருக்கு தலா 5 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள இரண்டு சரீரப் பிணைகள் வழங்கப்பட்டன.

மேலும், வெளிநாட்டு பயணங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் தொடர்புடைய சந்தேக நபரை இன்று காலை சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

துசித ஹல்லொலு மற்றும் அவரது சட்டத்தரணி சிற்றூர்தியில் பயணித்தபோது, துப்பாக்கிச் சூடு நிகழ்ந்து, வாகனத்திலிருந்து ஒரு கோப்பு திருடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாக குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here