பசறை, கோவிபால பிரதேசத்தில் நேற்று(31.10) 11 வயது சிறுமி ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குழந்தை தனது தந்தை மற்றும் சகோதரருடன் வீட்டு முற்றத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இடி தாக்குதலுக்கு இலக்கான குழந்தையின் சகோதரரும் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தந்தை காயமின்றி உயிர் தப்பினார்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







