இந்தியாவிலிருந்து கப்பல் மூலம் நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட சுமார் 55 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் ஒரு சந்தேக நபரை மதுவரி திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

நீர்கொழும்பு போருத்தோட்ட பகுதியில் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கப்பலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 375,000 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவை டுபாயில் இருந்து இயக்கப்படும் போதைப்பொருள் வலையமைப்பின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று மதுவரி திணைக்களத்தின் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here