முட்டை விலையை நிர்ணயம் செய்வதற்கு விலை சூத்திரம் ஒன்றை கொண்டு வர வேண்டும் என முட்டை வர்த்தக சங்கங்கள் அரசாங்கத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுர மாரசிங்க இது தொடர்பில் தெரிவிக்கையில்,
முட்டை ஒன்றை உற்பத்தி செய்வதற்கு 25 ரூபாவிற்கும் குறைவாகவே செலவாகுகின்றது. எனவே சந்தையில் ஒரு முட்டையை 35 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும்.
முட்டை விலை தொடர்பான நெருக்கடிகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. சந்தையில் ஒரு முட்டையின் விலை 40 ரூபா முதல் 45 ரூபா வரை அதிகரித்துள்ளது.
இதனால், முட்டை விலையை நிர்ணயம் செய்வதற்கு விலை சூத்திரம் ஒன்றை கொண்டு வர வேண்டும்.
ஒரு முட்டையின் உண்மையான உற்பத்தி செலவு 20 முதல் 23 ரூபாய் ஆகும். இதனால் சந்தையில் இருந்து ஒரு முட்டையை 30 ரூபாவுக்கு கொள்வனவு செய்ய முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.







