முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் ருக்ஷன் பெல்லன தெரிவித்துள்ளார்.

அவரது இதய தமனிகளில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால், விரைவில் அறுவை சிகிச்சை அவசியமாகிறது. தேசிய வைத்தியசாலையில் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக காத்திருப்பு பட்டியலில் இடம் பெற வேண்டியிருக்கும்.

சில சமயங்களில் இந்த காத்திருப்பு காலம் மூன்று ஆண்டுகள் வரை நீளக்கூடும் என்பதால், தனியார் மருத்துவமனையில் விரைவாக சிகிச்சை பெறும் வாய்ப்பு அவருக்கு உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பிணை வழங்கப்பட்டுள்ளதால், ரணில் விக்ரமசிங்கவுக்கு தாம் விரும்பும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் சுதந்திரம் இருப்பதாகவும் மருத்துவர் விளக்கியுள்ளார்.

மேலும், நீரிழப்பு பிரச்சினையும் ஏற்பட்டிருந்தது. தற்போது அந்த நிலை படிப்படியாக சீராகி வருவதாகவும் மருத்துவர் ருக்ஷன் பெல்லன தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here