எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பல பினாமி வேட்பாளர்கள் போட்டியிடவுள்ளதாக முன்னாள் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பல சுயேட்சை வேட்பாளர்கள் ஒரு முக்கிய வேட்பாளருடன் இணைக்கப்பட்டிருப்பதும், தேர்தலில் வாக்குகளைப் பெறுவதற்கு பினாமிகளாகக் காட்டிக் கொள்வதும் வெளிப்படையானது என்றார்.

புதிய விதிமுறைகள் அல்லது அளவுகோல்களின் மூலமே இந்த முறையை மாற்ற முடியும் என மஹிந்த தேசப்பிரிய மேலும் தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இளைஞர்களுக்கு வழங்கப்படும் ஒதுக்கீடு மாகாணசபை மற்றும் பொதுத் தேர்தல் வரை நீடிக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு இளைஞர்கள் குழுவுடன் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் தேர்தல் ஆணையாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here