யாழ்ப்பாணம் – மண்டைதீவு பகுதியில் 500 கிலோ கிராம் மஞ்சள் இன்றையதினம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவால் குறித்த மஞ்சள் கைப்பற்றப்பட்டதுடன் 25 வயதான சந்தேகநபர் ஒருவரும் கைதுசெய்யப்பட்டார்.

இந்தியாவிலிருந்து கடத்தி வரப்பட்டு கைமாற்றும்போதே கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைதான சந்தேக நபரை ஊர்காவாற்துறை பொலிஸார் ஊடாக ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

(யாழ் நிருபர்:- விஜய்குமார் லோஜன்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here