யாழ் வல்வெட்டித்துறையில் மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் மணல் ஏற்றிச் சென்ற பாரவூர்தியை பொலிஸார் நிறுத்த உத்தரவிட்டும் ஓட்டுநர் நிறுத்த மறுத்துள்ளார்.
வாகனத்தை நிறுத்த மறுத்த நிலையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அந்த பாரவூர்தியில் மணலில் மறைத்து கஞ்சாவை ஏற்றிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக தான் சாரதி வாகனத்தை நிறுத்தாது தப்பிச்செல்ல முயன்றுள்ளார்.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை வல்வெட்டித்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.







