ருவன்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எட்டியந்தோட்டை பிரதேசத்தில் உயிரிழந்த நான்கு வயது சிறுமியை அவரது தாயாரே கிணற்றில் வீசி கொலை செய்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

நேற்று (17.07) குறித்த சிறுமி அவர் வசிக்கும் பகுதியிலுள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.

எட்டியந்தோட்டை, கிரிபோருவ தோட்ட பகுதியைச் சேர்ந்த தேவ்மி அமயா என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

உயிரிழந்த சிறுமியின் தாய் வாய் பேச முடியாத பெண் என்பதுடன், சுகவீனமுற்றிருந்த நிலையில் கரவனெல்ல வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here