யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் முன்னாய்வுக் கூட்டம் அதன் தலைவரும் அமைச்சருமான சந்திரசேகர் தலைலையில் தற்போது (14/02/2025) நடைபெற்று வருகிறது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலே இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது.

இக்கூட்டத்தில் ஆளும் தரப்பு நாடாளுமன்ற பிரதிநிதிகள்,  மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், திணைக்கள தலைவர்கள் என பலரும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

இக்கூட்டத்தில் 56 மில்லியன் ஒதுக்கீட்டி பகிர்வுக்கான முன்மொழிவு, வீதி அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் சுத்திகரிப்பு, போக்குவரத்து, மின்சாரம் உள்ளிட்ட பல விடையங்கள் தொடர்பாக ஆராயப்பட்டுவருகிறது.

[யாழ் நிருபர்விஜய்குமார் லோஜன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here