நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கையின் போது போதைப்பொருள் குற்றம் தொடர்பில் 558 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்டவர்களில் 643 ஆண்களும் 15 பெண்களும் அடங்குவதோடு கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் 06 பேர் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதுடன், 07 பேர் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்களிடமிருந்து 427 கிராம் 147 மில்லி கிராம் ஹெரோயின், 207 கிராம் 934 மில்லி கிராம் ஐஸ் மற்றும் 1,170 கிராம் 98 மில்லி கிராம் கஞ்சா, 1,989 போதை மாத்திரைகள் மற்றும் 112 கஞ்சா செடிகள் ஆகிய போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.








