2024 பொதுத் தேர்தலில் நடிகரும் அரசியல்வாதியுமான ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை எதிர்த்து இலங்கை உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் (FR) மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவர் இன்று உச்ச நீதிமன்றில் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் சார்பில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவுள்ள ரஞ்சன் ராமநாயக்கவின் வேட்புமனுவை நிராகரித்து உத்தரவிடுமாறு மனுதாரர் நீதிமன்றில் கோரியுள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவுக்கு வாக்களிக்கவோ அல்லது பாராளுமன்றத்தில் அமரவோ உரிமை இல்லை என்ற அடிப்படையில் தீர்ப்பு வழங்குமாறு மனுதாரர் கோரியுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் கம்பஹா மாவட்ட தேர்தல் அதிகாரிகள் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.








