ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்து பல்வேறு கலந்துரையாடல்களில் பங்கேற்பதற்காக  04ம் திகதி முதல் 07ம் திகதி வரை தங்கியிருப்பதற்கு திட்டமிட்டுள்ளார்.

இந் நிலையில்  அவரது  வருகையை எதிர்த்து போராட்டம் முன்னெடுக்கப்படலாம் என்ற குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராஜா கஜேந்திரன், தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்க பிரதிநிதிகள் என 8 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 இவ் வழக்கை நேற்றைய தினம்(03) யாழ் பொலிஸார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

இது தொடர்பில் தங்கள் நியாயங்களை நேரடியாகவோ, சட்டத்தரணி ஊடாகவோ நீதிமன்றில், புதன்கிழமை  அதாவது இன்று [03] மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் பிரதிவாதிகளுக்கு கட்டளையிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here