லெபனானிற்குள் விசேட நடவடிக்கையை மேற்கொண்ட இஸ்ரேலின் விசேட படைப்பிரிவினர் ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட தளபதியொருவர கைதுசெய்து இஸ்ரேல் கொண்டு சென்றுள்ளனர்.
லெபனானின் வடபகுதியில் உள்ள பெட்ரோனில் தரையிறங்கிய இஸ்ரேலின் விசேட படைப்பிரிவினர் ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ் உறுப்பினரை கைதுசெய்து கடல்வழியாக தப்பிச்சென்றுள்ளனர்.
ஹெஸ்புல்லா அமைப்பின் சிரேஸ்ட உறுப்பினரை கைதுசெய்து விசாரணைக்காக இராணுவ புலனாய்வு பிரிவினரிடம் கையளித்துள்ளதாக இஸ்ரேலிய படையினர் தெரிவித்துள்ளனர்.
ஹெஸ்புல்லா அமைப்பின் கடற்படை நடவடிக்கைகளிற்கு பொறுப்பான இமாட் அம்ஹாஸ் என்பவரே கைதுசெய்யப்பட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதேவேளை இஸ்ரேலிய படையினர் கடத்திச்சென்ற நபர் சாதாரண பிரஜை கப்பல் கப்டன் என லெபனான் அமைச்சர் தெரிவித்துள்ளார்ஐக்கியநாடுகள் பாதுகாப்பு சபைக்கு இது குறித்து முறைப்பாடு செய்யப்போகின்றோம்,என தெரிவித்துள்ள லெபனானின் காபந்து பிரதமர் இந்த சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு லெபனான் இராணுவத்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
இஸ்ரேல் இவ்வாறான லெபனானிற்குள் கடற்படை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளமை இதுவே முதல் தடவை.








