கடந்த 30 ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக வீடுகளை இழந்தவர்களுக்கு வீடுகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 08 மாவட்டங்களை சேர்ந்த 16 ஆயிரத்து 759 வீடுகள் வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 2019 ம் ஆண்டிலிருந்து இதுவரை 2 இலட்சத்து 74 ஆயிரத்து 728 குடும்பங்களை சேர்ந்த 9 இலட்சத்து 14 ஆயிரத்து 722 பேர் மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

2024ம் ஆண்டின் இறுதியில் வடக்கு,கிழக்கு மாகாணங்களை சேர்ந்த இரண்டு மாகாணங்களில் 1 இலட்சத்து 50 ஆயிரத்து 488 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன .

குறித்த வீடுகளை நிர்மாணிப்பதற்கு இலங்கை ,இந்திய அரசு, மற்றும் அரச சார்பற்ற அமைப்புக்கள் அத்துடன் சர்வதேச அமைப்புக்கள் உள்ளிட்ட பிற அமைப்புக்கள் மூலம் நிதி வழங்கப்படுகிறது.

2009ம் ஆண்டுக்கு முன்னர் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வடக்கு,கிழக்கு மாகாணங்களில் உள்ள 08 மாவட்டங்களில் 16 ஆயிரத்து 759 வீடுகள் நிர்மாணிக்கப்படவேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 550 சதுர அடி வீடுகளை அமைப்பதற்காக 11 இலட்சம் ரூபாயும் 340 சதுர அடியில் வீடுகளை அமைக்க 6 இலட்சத்து 50ஆயிரம் ரூபாய் எனவும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கட்டிட நிர்மாண மூலப்பொருட்களின் விலை அதிகரித்துள்ளதால் 550 சதுர அடி வீடுகளை அமைப்பதற்கு 16 இலட்சம் ரூபாயும் 340 சதுர அடி வீடுகளை அமைப்பதற்கு 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் எனவும்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி 2025ம் ஆண்டில் அமுலாகும் வகையில் நிரந்தர வீடமைப்பு திட்ட பயனாளி நிர்மாணிக்கும் அடிப்படையில் பணத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நகர அபிவிருத்தி நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சர் சமர்ப்பித்த அமைச்சரவை யோசணைக்கே அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி 550 சதுர அடி வீடுகளை அமைப்பதற்காக அரச நிதியில் வழங்கப்படும் உதவிப்பணத்தை 15 இலட்சம் ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அத்துடன் 340 சதுர அடி வீட்டினை அமைப்பதற்காக அரசநிதியில் வழங்கப்படும் உதவிபணத்தை 9 இலட்சம் வரை அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here