வத்தளை, உஸ்வெட்டகெய்யாவ பகுதியில் உள்ள ஒரு கிடங்கில், சந்தையில் வெளியிடுவதற்காக தயாரிக்கப்பட்ட மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற கோதுமை மா ஒரு தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புறக்கோட்டை பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது கிடைத்த தகவல்களின் அடிப்படையில், குறித்த கோதுமை மா கையிருப்பு கண்டுபிடிக்கப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

சந்தைக்கு வெளியிடுவதற்காக தயாரிக்கப்பட்டிருந்த, மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 750 டன் கோதுமை மாவு கிடங்கில் கண்டுபிடிக்கப்பட்டது.

சம்பந்தப்பட்ட மாவுகளின் உற்பத்தி திகதிகள் கடந்த ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களாகவும், காலாவதி திகதிகள் இந்த ஆண்டு மார்ச் மற்றும் மே மாதங்களாகவும் குறிப்பிடப்பட்டிருந்ததாகவும், அவை பூச்சிகளால் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, சம்பந்தப்பட்ட பொருட்கள் நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகளின் காவலில் எடுத்து மேலும் விசாரணைகள் நடத்தப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here