வன்னி மாவட்ட தமிழ் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவதாக வன்னி மாவட்டத்தில் உதைபந்து சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் ஜே.ஸ்ரீ ரங்கா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போது அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவாக அரசியல்வாதிகளால் மக்கள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருகின்றனர்.

எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு மக்கள் தங்களது பிள்ளைகள் தொடர்பில் சிந்திக்க வேண்டிய நேரம் இதுவாகும்.

எங்களுடைய சமூகத்தை இலக்கு வைத்துப் பலர் போலி வாக்குறுதிகளை வழங்கி, வாக்கு சேகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.

அவர்கள் எமது தமிழ்ச் சமூகத்தை வியாபார பொருளாகவும் பயன்படுத்துகின்றனர்.

இறுதியில் வன்னி மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு மாற்றம் எனக் கூறி, ஏமாற்றமே கிடைத்துள்ளது.

ஆகையால், தற்போது மக்கள் சிந்தித்துச் செயற்பட வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் ஜே.ஸ்ரீ ரங்கா குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here