யாழ்ப்பாணம் வடமராட்சி வல்லிபுர ஆழ்வார் ஆலய குரோதி வருட கொடியேற்ற பெருந்திருவிழா ஆலய பிரதம சிவாச்சாரியார் கண்ணன் குருக்கள் மற்றும் சிவாச்சாரியார்கள் தலைமையில் காலை 9:15 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
இதில் வடமராட்சியின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பித்துள்ளனர்.
இதேவேளை ஆறாம் திருவிழா வரை காலை மாலை சிறப்பு அபிசேட பூசைகள் இடம் பெற்று 7 ம் திருவிழாவான 08/09/2024 அன்று வல்லிபுரத்து ஆழ்வார் வெளிவீதி வரவுள்ளார்.
தொடர்ந்து 8 ம் திருவிழாவான 09/09/2024 அன்று குருக்கட்டு பிள்ளையார் திருவிழாவும், 9 ம் திருவிழாவான 10/09/2024 அன்று வெண்ணைத் திருவிழாவும், 10 ம் திருவிழாவான 11/09/2024 அன்று துகில் திருவிழாவும், 11 ம் திருவிளாவான 12/09/2024 அன்று பாம்புத்திருவிழாவும், 12 ம் திருவிழாவான 13/09/2024 அன்று கம்சவத திருவிழாவும், 13 ம் திருவிழாவான 14/09/2024 அன்று வேட்டைத்திருவிழாவும், 14 ம் திருவிழாவான 15/09/2024 அன்று சப்பறத்திருவிழாவும், 15 ம் திருவிழாவான 16/09/2024 அன்று தேர்த்திருவிழாவும், 16. ம் திருவிழாவான சமுத்திர திருவிழா 17/09/2024 அன்றும் இடம் பெறவுள்ளதுடன், மறுநாள் 17 ம் திருவிழாவாக கேணித்தீர்த்தமும், இடம் பெறவுள்ளன.
திருவிழாவில் கலந்துகொள்ளவுள்ளவர்கள் சைவ சமய முறைப்படி திருவிழாவில் கலந்துகொள்ளுமாறும் ஆலய நிர்வாகம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சுகாதார வசதிகளை பருத்தித்துறை பிரதேசசபையும், பாதுகாப்பு ஏற்பாடுகளை பருத்தித்துறை பொலிஸாரும், மேற்கொண்டுள்ளதுடன், போக்குவரத்து ஏனைய வசதிகளும் சம்மந்தப்பட்ட தரப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.








