ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வழிகாட்டுதலுக்கு முரணாக, 2026ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தை நிறைவேற்ற தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்த கட்சி உறுப்பினர்கள் 8 பேரின் உறுப்புரிமை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கட்சி அறிவித்துள்ளது.

கட்சியின் அறிவிப்புகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு முரணாக செயல்பட்டதால், அடுத்த மத்திய செயற்குழுக் கூட்டத்தில் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கட்சி தெரிவித்துள்ளது.

இடைநிறுத்தப்பட்ட உறுப்பினர்கள் பட்டியல்:

  1. வீரசிங்க தர்ஷன விதானகே — பதியலாவ பிரதேச சபை

  2. மொஹமட் நசீர் மொஹமட் ரிநோஸ் — கற்பிட்டி பிரதேச சபை

  3. ஏ.ஏ. அனுர குமார — நாத்தாண்டிய பிரதேச சபை

  4. மாரசிங்க ஆரச்சிகே அமில் எரங்க — நாத்தாண்டிய பிரதேச சபை

  5. ரதுகமகே உமேஷா ரஷ்மி மல்ஷானி — நாத்தாண்டிய பிரதேச சபை

  6. வகலந்தே அதுல குமார வகலத் — பொல்காஹவெல பிரதேச சபை

  7. பாலசூரிய முதியன்சலாகே அனுர குமுர — பொல்காஹவெல பிரதேச சபை

  8. பி. கே. சுமேத லக்மால் — பெல்மடுல்ல பிரதேச சபை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here