கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகளும் இன்று (1/21/2025) முதல் வழமைப்போல முன்னெடுக்கப்படவுள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாகக் கிழக்கு மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நேற்று மூடப்பட்டிருந்தன.

இந்தநிலையில், கிழக்கு மாகாண பாடசாலைகளில் நேற்று இடம்பெறவிருந்த தவணை பரீட்சைகள் இடைநிறுத்தப்பட்டன.

தற்போது, காலநிலையின் தாக்கம் குறைவடைந்து வரும் நிலையில், பாடசாலைகளை மீண்டும் இயக்குவதற்குத் தீர்மானித்துள்ளதாகக் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.

இதன்படி, கிழக்கு மாகாண பாடசாலைகளில் நேற்று இடம்பெறவிருந்த தவணை பரீட்சைகள் எதிர்வரும், 25 ஆம் திகதி இடம்பெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, வடமத்திய மாகாணத்திலுள்ள அனைத்து பாடசாலைகளினதும் கற்றல் செயற்பாடுகள் இன்று முதல் வழமைப்போன்று முன்னெடுக்கப்படவுள்ளன என வடமத்திய மாகாண கல்வி செயலாளர் தெரிவித்துள்ளார்.

சீரற்ற காலநிலை காரணமாக வடமத்திய மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளும் நேற்றைய தினம் மூடப்பட்டிருந்தன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here