வவுனியா பிரதேச செயலகம் மற்றும் மனித வள வேலை வாய்ப்பு திணைக்களமும் இணைந்து நடத்தும் மாபெரும் தொழிற்சந்தை நேற்றைய தினம் வவுனியா பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்று இருந்தது.

நிகழ்வின் ஒரு பகுதியாக, இலங்கை குடிசனவீட்டு வசதிகள் தொகை மதிப்பு வேலை திட்டத்திற்காக தற்காலிக உத்தியோகத்தர்களை இணைப்பதற்கான ஏற்பாடுகளும் இடம்பெற்றிருந்தது.

வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 04 கல்விசாரா தொழில் வழங்குனர், 10 தனியார் தொழில் வழங்குனர் மற்றும் மனிதவள வேலை வாய்ப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள்,  தொழில் பெறுநர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here