எதிர்வரும் 21ம் திகதி இடம்பெறவுள்ள இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான இறுதி பிரச்சாரத்திற்கான நாள் இன்று(18.09.2024) எனவே இன்றிலிருந்து தேர்தல் மற்றும் வேட்பாளர்கள் தொடர்பான சுவரொட்டிகளை காட்சிப்படுத்துவது தேர்தல் சட்ட விதிமுறை மீறல் என இலங்கையின் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அதனடிப்படையில் வவுனியாவில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பதாதைகள் மற்றும் சுவரொட்டிகளை நீக்கும் பணிகளை வவுனியா பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

இன்று (18) காலை 8.30 மணிதொடக்கம் இந்த பணிகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயக்கொடி தலைமையிலான 20ற்கும் மேற்பட்ட பொலிஸார் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here