இந்தோனேசியாவில் இன்று (15) அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த சோக சம்பவத்தில் மேலும் பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேசியாவில் இன்று அதிகாலை 3.28 மணியளவில் ரிக்டர் அளவில் 7.7 சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு பல பின்னதிர்வுகளும் பதிவாகியுள்ளன.
அந்நாட்டின் தேசிய புவியியல் முகமை ஆரம்பத்தில் சுனாமி எச்சரிக்கை ஒன்றையும் வெளியிட்டது. பின்னர் அந்த எச்சரிக்கை விலக்கிக்கொள்ளப்பட்டது.
அத்துடன் மீண்டும் இன்று மாலை அங்கு மற்றுமோர் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதேவேளை இலங்கைக்கு இதனால் பாதிப்பு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.








