மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவிலுள்ள புத்தங்கேணி கடற்கரையில் நேற்று புதன்கிழமை (12/02/2025) கரையொதுங்கிய நிலையில் பாரிய தாங்கி ஒன்றை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


குறித்த கடற்கரையை அண்டிய பகுதியில் பாரிய தாங்கி ஒன்று மிதந்து கரையொதுங்குவதை அவதானித்த அந்த பகுதி மக்கள் அதனை இழுத்து மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அண்மைகாலமாக இவ்வாறான தாங்கிகள் கிழக்கு கடற்கரைகளில் ஒதுங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
[மட்டக்களப்பு நிருபர் – கனகராசா சரவணன்]








