யாழ்ப்பாணத்தில் வாக்களிக்க வந்த இளைஞர் ஒருவர் வாக்குச்சீட்டை கிழித்ததால் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாயன்மார்கட்டு மகேஸ்வரி வித்தியாசாலையில் இன்றைய தினம் சனிக்கிழமை (21.09) வாக்களிக்கச் சென்ற இளைஞர், தனது வாக்காளர் அட்டையை காண்பித்து அடையாளத்தை உறுதிப்படுத்தி, வாக்குச்சீட்டினை கைகளில் பெற்ற பின்னர், வாக்களிக்காமல், வாக்குச்சீட்டினை கிழித்துள்ளார்.

அதனை அங்கிருந்த அதிகாரிகள் கவனித்து, பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, பொலிஸார் இளைஞரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் பொலிஸார் மற்றும் தேர்தல் திணைக்கள உத்தியோகஸ்தர்கள் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையின்போது, அந்த இளைஞர் தேர்தலில் வாக்களிப்பது இதுவே முதல் தடவை என தெரியவந்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கமைய அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here