நோயாளர்களை  MR பரிசோதனைக்கு யாழ்ப்பாணம் அழைத்து சென்று மட்டக்களப்பு திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி கிளிநொச்சியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.

நோயாளர்களை  MR பரிசோதனைக்கு யாழ்ப்பாணம் அழைத்து சென்று மட்டக்களப்பு திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை நோயாளர் காவு வண்டி, கிளிநொச்சியில் மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.நோயாளர் காவு வண்டியில்  மூன்று நோயாளர்கள்  பயணித்த நிலையில்  நோயாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை அத்தோடு அவர்களும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here