நடமாடும் தேங்காய் விற்பனை வேலைத்திட்டம் ஒன்றைத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை நேற்று (23) முதல் ஆரம்பித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் 100 மற்றும் 120 ரூபாய்க்குத் தேங்காய்கள் சில்லறை விலைக்கு விற்பனை செய்யப்படவுள்ளதாக அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு மலிவு விலையில் தேங்காய்களை விற்பனை செய்யும் நோக்கில் கொழும்பு, ஸ்ரீ ஜெயவர்தனபுர மற்றும் கடுவல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தலா 10,000 தேங்காய்களைச் சந்தைக்கு விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதன் பின்னர், நாளாந்தம் 5,000 தேங்காய்களைச் சந்தைக்கு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகத் தெங்கு அபிவிருத்தி அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here