உலகம் தென் கொரியாவில் 181 பயணிகளுடன் சென்ற விமானம் ஓடுபாதையில் இருந்து தவறி விழுந்ததில் குறைந்தது 62 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு தீயணைப்பு சேவை தெரிவித்துள்ளது.
175 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களை ஏற்றிச் சென்ற Jeju Air விமானம் (7C2216) தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து திரும்பும் போது சியோலுக்கு தெற்கே 178 மைல் (288 கிமீ) தொலைவில் உள்ள Muan சர்வதேச விமான நிலையத்தில் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த இடத்தில் 80க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்களும், 30 தீயணைப்பு வாகனங்களும் ஈடுபடுத்தப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், விமானத்தில் இருந்த பயணிகளில் 173 தென் கொரியர்களும் இரண்டு தாய்லாந்து பிரஜைகளும் அடங்குவதாக Yonhap தெரிவித்துள்ளது.
இந்த விபத்து ஜெஜு ஏர் வரலாற்றில் முதல் மரண விபத்து ஆகும்.








