இந்தோனேசியாவில் நடைபெற்ற மிஸ் இன்டர்நேஷனல் – 2024 சர்வதேச அழகிப் போட்டியில் கலந்துகொண்டு முதலிடத்தைப் பிடித்த திலினி குமாரி நேற்று முன்தினம் (17) நாட்டை வந்தடைந்துள்ளார்.

உலகின் 20 நாடுகளைச் சேர்ந்த அழகுராணிகள் பங்கேற்ற இப்போட்டி, இந்தோனேசியாவின் பாலி தீவில் கடந்த 9ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை நடைபெற்றது.

இதில், கண்டி, பிலிமத்தலாவ பிரதேசத்தை சேர்ந்த திலினி குமாரி முதலிடத்தை தனதாக்கி கொண்டார். இவர் நடிகையாகவும், அறிவிப்பாளராகவும் பல துறைகளிலும் தனது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here