நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக பல்வேறு பகுதிகளில் காட்டுத் தீப்பரவல்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பொலன்னறுவை மாவட்டத்தின் திம்புலாகல கந்த பகுதியில் நேற்று (07) பிற்பகல் ஏற்பட்ட காட்டுத் தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அதேபோல், உடவலவ பகுதியில் உள்ள வனப்பகுதியில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீப்பரவலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக உடவலவ பொலிஸார் உறுதிப்படுத்தினர்.
மேலும், மாத்தளை உக்குவெலவில் உள்ள வனப்பகுதியிலும், இரத்தினபுரி கொன்கஸ்தென்னவிலுள்ள வனப்பகுதியிலும் தீப்பரவல்கள் பதிவாகியுள்ளன என்று அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிவித்துள்ளது.








