ஹட்டன் – யுலிபீல்ட் – வெலிங்டன் பெருந்தோட்ட மக்களினால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இப் போராட்டம் ஆனது தோட்ட நிர்வாகத்திடம் இருந்து தங்களுக்குக் கிடைக்க வேண்டிய சலுகைகள் உரிய முறையில் கிடைப்பதில்லை என்பதனால் முன்னெடுக்கப்பட்டுள்ளது என தோட்டமக்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களது ஆலயத்தில் இடம்பெற்ற வருடாந்த உற்சவத்துக்குத் தோட்ட நிர்வாகத்தின் ஊடாக வழங்கப்பட வேண்டிய சலுகைகள் உரிய முறையில் வழங்கப்படவில்லை என குற்றஞ்சாட்டி கடந்த 14ஆம் திகதி முதல் அந்த தோட்ட மக்கள் பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் நேற்று முன்தினமும், கடந்த 19ஆம் திகதியும் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
எனினும் இந்த பேச்சுவார்த்தைகள் பலனளிக்கவில்லை என யுலிபீல்ட் – வெலிங்டன் தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.







