மத்திய கிழக்கு நாடுகளில் தலைமறைவாக போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த ஏழு பேர் இலங்கை அதிகாரிகளிடம் சரணடைய ஒப்புக்கொண்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் இலங்கைப் பூர்வீகத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்று வரும் “முழு நாடுமே ஒன்றாக” என்ற தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டத்தின் கொழும்பு மாவட்ட செயற்பாட்டு அமர்வில் கலந்து கொண்டபோதே அமைச்சர் இதை தெரிவித்தார்.
அமைச்சர் மேலும், வெளிநாடுகளில் செயல்படும் இலங்கையரை குறிவைத்து, போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை முற்றிலும் ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.








