வெளிநாட்டு விவகாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சின் டிஜிட்டல் மாற்றக் குழு, குறித்த அமைச்சின் பிரதி அமைச்சர் அருண் ஹேமசந்திரவின் தலைமையில் இன்று (11) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் முதல் முறையாக கூடியுள்ளது.

வெளிநாட்டு விவகார அமைச்சின் தூதரகப் பிரிவை டிஜிட்டல் மயமாக்கும் திட்டம் தொடர்பில் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இதற்கு இணையாக, வெளிநாடுகளில் அமைந்துள்ள இலங்கை தூதரகங்களின் தூதரகப் பிரிவுகளையும் டிஜிட்டல் மயமாக்குதல் மற்றும் அரச நிறுவனங்களை தூதரக அமைப்புடன் ஒருங்கிணைத்தல் போன்ற விடயங்களிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரொஷான் கமகே, வெளிநாட்டு விவகார அமைச்சின் தூதரக விவகாரங்கள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் கே.டி குமாரசிறி, வெளிநாட்டு விவகார அமைச்சின் தூதரகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் சுதந்த கனேகம ஆராச்சி, டிஜிட்டல் அமைச்சின் ஆலோசகர் கலாநிதி மனோஜ் கமகே, GovTech Sri Lanka இன் டிஜிட்டல் மாற்றப் பிரிவுத் தலைவர் மைக்கல் ஹெல்ம் Michael Helm ஆகியோர் உள்ளிட்ட குழுவின் ஏனைய உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here