தியவன்னா ஓயாவின் நீர்மட்டம் உயர்வினால் ஏற்பட்டுள்ள மோசமான காலநிலை காரணமாக நாடாளுமன்ற வளாகத்திற்கு அருகில் உள்ள வெலிகொட்டாவை வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்ற இலங்கை இராணுவத்தின் 18வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் படையினர் செயற்பட்டனர்.
அத்துடன், நீர் மட்டம் உயர்வினால் உடையும் அபாயத்தில் இருந்த பன்னல ஜயவதன ஏரிக்கரையை மணல் மூட்டைகளுடன் பாதுகாப்பதற்காக இலங்கை இராணுவத்தின் 9வது இலங்கை தேசிய பாதுகாப்பு படையின் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
களனி கங்கையின் நீர் மட்டம் அதிகரித்துள்ள நிலையில், கடுவெல பிரதேசத்தில் உள்ள பொமிரிய கால்வாய் கரையிலும், கொஹிலவத்தை பகுதியிலுள்ள மற்றுமொரு கால்வாயிலும் மணல் மூட்டைகளை பரப்பி வெள்ள அபாயத்தை குறைக்குமாறு இலங்கை இராணுவத்தின் 2வது இலங்கை காலாட்படையினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.








