வடக்கு மாகாண வேலையில்லாப் பட்டதாரிகள் அனைவருக்கும் சமமான வேலை வாய்ப்பை வழங்கக்கோரி கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று இன்று(16) நடைபெற்றது.

யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபியிலிருந்து ஆரம்பமாகிய கவனயீர்ப்பு பேரணி, தபால் கந்தோர் வீதியூடாக யாழ் பேருந்து நிலையத்தை சென்றடைந்தது.

இதன்போது கவனயீர்ப்பில் ஈடுபட்டவர்கள், பட்டதாரிகள் அணியும் உடைகளை அணிந்தவாறும், பட்டதாரிகள் கூலித்தொழிலில் ஈடுபடுவதை சித்தரிக்கும் வகையிலும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ் நகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் துண்டு பிரசுர விநியோகத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள், அதனைத் தொடர்ந்து ஆளுநர் அலுவலகம் வரை பேரணியாக சென்றனர்.

அதனையடுத்து வட மாகாண ஆளுநரைச் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டது.

 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here