தற்பொழுது நிலவுகின்ற சீரற்ற காலநிலை காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் இரணைமடுகுளத்தின் மேலதிக நீர் வெளியேற்றுவதன் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவிளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கண்டாவளை ஜயன்கோயிடி பெரியகுளம், ஊரியான் ஆகிய பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ள அனர்த்தம் காரணமாக இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் கண்டாவளை மகா வித்தியாலயத்தில் 147 குடும்பங்களைச் சேர்ந்த 371 பேரும் ஐயன்கோயிலடி பாடசாலையில் 26 குடும்பங்களைச் சேர்ந்த 68 பேரும் ஊரியான்பகுதியில் 62 குடும்பங்களைச் சேர்ந்த 190 பேரும் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த 10 குடும்பங்களைச் சேர்ந்த 31 பேரும் இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மொத்தமாக 245 குடும்பங்களைச் சேர்ந்த 660 பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான சமைத்த உணவு பிரதேச செயலகம் ஊடாக  ஒழுங்குபடுத்தப்பட்டு  வழங்கப்பட்டு வருவதுடன் அவர்களுக்கான சுகாதார வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

[கிளிநொச்சி  நிருபர் – ஆனந்தன்]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here