சாவகச்சேரி ஆதார மருத்துவமனையின் புதிய செயல் மருத்துவக் கண்காணிப்பாளராக டாக்டர் கோபாலமூர்த்தி ராஜீவ் இன்று செவ்வாய்கிழமை காலை அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
டாக்டர் ராஜீவ், சுகாதார அமைச்சின் செயலாளரால், தற்காலிக மருத்துவ கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்படி புதிய மருத்துவ கண்காணிப்பாளரை வரவேற்கும் நிகழ்வில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சமன் பத்திரன, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் கேதீஸ்வரன் மற்றும் மதகுருமார்கள் கலந்துகொண்டனரென எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.









