பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷகிப் அல் ஹசன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் மற்றும் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இதனையடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் நடத்தும் உள்ளூர் போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி வந்தார்.

இந்தப் போட்டிகளில் பந்து வீசும் முறை விதிகளுக்கு மீறியதாக இருப்பதாக ஷகிப் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

எனவே, இந்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்து அதற்கான சோதனையில் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் ஈடுபட்ட நிலையில், உண்மையில் பந்து வீசியதில் ஷகிப் அல் ஹசன் விதிகளை மீறியது தெரியவந்தது.

இதனையடுத்து, அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, பங்களாதேஷ் வீரர் ஷகிப் அல் ஹசன் பந்து வீசுவதிலிருந்து இடைநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

ஐ.சி.சியினால் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச அனைத்து கிரிக்கெட் போட்டிகளிலும் அவருக்குத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here