தேசிய விமான சேவை நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் கடமைகள் மற்றும் செயல்பாடுகளை கோடிட்டுக் காட்டும் வகையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவினால் 2025 நவம்பர் 25 ஆம் திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
ஸ்ரீலங்கன் விமான சேவையை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட அரசாங்கம் எடுத்த தீர்மானத்திற்கு இணங்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ஒக்டோபர் மாதம், ஸ்ரீலங்கன் விமான சேவையை விற்பனை செய்யும் திட்டத்தை கைவிட்டு, அதிக இலாபகரமான எதிர்காலத்திற்காக அதனை மறுசீரமைக்குமாறு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் தலைவர் சரத் கனேகொட, இலங்கையர்கள் அனைவரும் பெருமைப்படும் ஒரு நிறுவனமாக இருக்க வேண்டும் என்றும், அது இலங்கையர்களுக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி திஸாநாயக்க அறிவுறுத்தியதாக தெரிவித்தார்.
பல ஆண்டுகளாக ஏகப்பட்ட நஷ்டத்தை சந்தித்து வரும் விமான நிறுவனத்தை ஓரளவு விற்று நிர்வகிப்பதற்கான ஏலங்களை அழைப்பதற்கான முன்னாள் ஆட்சியின் திட்டங்களை அரசாங்கம் தூக்கி எறிந்துள்ளது .








