மினுவங்கொடை – உன்னருவ பகுதியில் 10 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் மதிப்புள்ள ஹெராயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோனஹேன காவல் சிறப்பு அதிரடிப்படை முகாமின் அதிகாரிகள் நேற்று நடத்திய சோதனையின் போதே இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபரிடமிருந்து 1.66 கிலோ கிராம் ஹெராயின் மற்றும் 308 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மினுவங்கொடை பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.








