இன்று காலை 6 மணியளவில் ஹொரணை வைத்தியசாலை சந்திக்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில், பெல்லபிட்டி பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய ஒல்வின் இந்திரசிறி என்ற இரு பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தார்.

வேன் ஒன்றும் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மொரகஹேனவில் உள்ள தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேன், ஹொரணைலிருந்து அங்குருவாதொட்ட நோக்கி சென்று கொண்டிருந்தபோது, விகாரைக்கு புனித சடங்குக்காக மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் வலதுபுறம் திரும்ப முயன்றபோது விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் காயமடைந்த தம்பதியினர் ஹொரணை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு கணவர் உயிரிழந்துள்ளார்.

வேனின் அதிக வேகமே விபத்துக்கு காரணம் என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வேனின் சாரதி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் ஹொரணை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here