கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த 17வது ஆசிய கிண்ணத் தொடர் இன்று (09) அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிறது.
தொடக்க ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி, ஹொங்கொங் அணியை எதிர்கொண்டு களமிறங்குகிறது.
இந்த தொடர் செப்டம்பர் 28ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், மொத்தம் எட்டு ஆசிய அணிகள் சாம்பியன் பட்டத்தை நோக்கி மோதவுள்ளன.
இலங்கை அணி தமது பிரயாணத்தை எதிர்வரும் சனிக்கிழமை பங்களாதேஸ் அணிக்கு எதிரான ஆட்டத்துடன் தொடங்கவுள்ளது.
ரசிகர்களின் அதிக அக்கறையை பெற்றிருக்கும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் செப்டம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ளது.
திட்டமிடப்பட்ட 19 ஆட்டங்களில், இறுதி போட்டி உட்பட 11 போட்டிகள் டுபாயில் நடைபெறவுள்ளன. எஞ்சிய எட்டு ஆட்டங்கள் அபுதாபியில் நடக்கவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
ஆசிய கிண்ண வரலாற்றில் இந்தியா 8 முறை சம்பியன் பட்டம் கைப்பற்றியுள்ளது.
இலங்கை 6 முறை சம்பியனாகியுள்ளதோடு, பாகிஸ்தான் 2 முறை கோப்பையை வென்றுள்ளது.
இத்தொடர் மூலமாக இந்தியா தனது சாதனையை நிலைநிறுத்துமா அல்லது இலங்கை, பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் புதிய சாதனையை படைப்பார்களா என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.








