2025ஆம் ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 4 வரை நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற வீதி விபத்துகளில் மொத்தம் 1,870 பேர் உயிரிழந்துள்ளனர் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

அதேகாலத்தில் 1,757 வீதி விபத்துகள் பதிவாகியுள்ளன. இதனால் தினசரி சராசரியாக 7 முதல் 8 பேர் வரை உயிரிழக்கின்றனர் என்று காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

இந்த நிலைமையை முன்னிட்டு, சாரதிகள், பாதசாரிகள் மற்றும் பயணிகள் அனைவரும் போக்குவரத்து விதிகளை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here