போதைப்பொருள் கடத்தல் மற்றும் தொடர்பான தகவல்களை வழங்குவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட 1818 தொலைபேசி இலக்கத்திற்கு கடந்த 4 நாட்களுக்குள் 800 இற்கும் மேற்பட்ட அழைப்புகள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

கொழும்பு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்ற ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நிகழ்ச்சித் திட்டம் தொடர்பான கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை வெளிப்படுத்தினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலைகள் தொடர்பான தகவல்கள் பல 1818 இலக்கத்திற்குள் வந்துள்ளன.

இந்த தகவல்கள் பொலிசார் சுற்றிவளைப்புப் பணிகளில் பயன்படுத்தப்படுகின்றன.

இது தொடர்பில் கொழும்பு மாவட்டத்திலிருந்து அதிகளவான தகவல்கள் பெறப்பட்டுள்ளன.

மேலும், இந்த நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட முதல் 4 நாட்களில், நாட்டில் 5,300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், அதே சமயம் கொழும்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பரவல் அதிகமாக உள்ளதை காண முடிந்துள்ளது என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here